இந்தியாவில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் என்பது அவசியம். ஒவ்வொரு பயிற்சி நிறுவனங்களும் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை முடிவு செய்கின்றது. அதன்படி கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் பயிற்சி பெறுவதற்கான கட்டணம் 2200 ரூபாய், ஆட்டோ ரிக்ஷா 3000 ரூபாய், கார் மற்றும் இதர இலகு ரக வாகனங்களுக்கான கட்டணமாக 4000 ரூபாய் மற்றும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஓட்டுநர் பயிற்சிக்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிள் பயிற்சி பெற 3000 ரூபாய் கட்டணம் ஆகவும், ஆட்டோ ரிக்ஷாவிற்கு 4000 ரூபாய், கார் மற்றும் இதர இலகு ரக வாகனங்களுக்கு 7000 ரூபாய், பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.