அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று இருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியைள்ளது. அவர் கூறியதாவது, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ல் ஆட்சி. 2016-ல் தொடர் ஆட்சிக்கு கொண்டு வந்தாங்க.

தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்களை எம்எல்ஏ ஆக்குனாங்க. ஆனால் அப்போ மட்டும் அம்மா அமெரிக்கா போய் சிகிச்சை பெற்று இருந்தால் இன்னும் உயிரோட இருந்திருப்பாங்க. அம்மா அதைக் கேட்கல. கட்சி நல்லா இருக்கணும். ஆட்சி நல்லா இருக்கணும். நூறாண்டு காலத்துக்கு இந்த கட்சியும், ஆட்சியும் நல்லா இருக்கணும்னு சட்டமன்றத்தில் பேசுனாங்க என கூறியுள்ளார்.