குறைந்த ஊதியம் பெரும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஓட்டுனராக பயன்படுத்தி வந்த தங்களை அப்பணியில் நியமிக்க உத்தரவிடக்கோரி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களான ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதாவது, கல்வி தகுதியை காரணம் காட்டி அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் கருத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. அதில், குறிப்பாக சொந்த மக்களை அரசு சுரண்டக்கூடாது, அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் குறைந்த ஊதியம் பெறும் தூய்மை பணியாளரை அதிக ஊதியம் உள்ள ஓட்டுநர் பணிக்கு பயன்படுத்தியது குடி மக்களை அரசை சுரண்டுவது போன்றது என கண்டனம் தெரிவித்துள்ளது.