தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வரும் நிலையில் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி முதல் ரூ. 17 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இதேபோன்று வெப்ப தொடர்களில் நடிப்பதற்கு ஒரு எபிசோடுக்கு ரூ‌.65 லட்சமாக சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை மற்றும் கேரளாவில் நடிகர் மோகன்லாலுக்கு பிரம்மாண்ட வீடுகள் இருக்கும் நிலையில் தற்போது அவருடைய சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.410 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் இவருக்கு துபாயில் ரூ‌.25 கோடி மதிப்புள்ள வீடு இருப்பதோடு பல ஆடம்பரமான சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.