
நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை அதிக அளவில் விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணம் வசதியாக இருப்பதோடு கட்டணமும் குறைவு. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் போது அதில் வழங்கப்படும் உணவுகளால் அடிக்கடி பிரச்சினைகள் என்பது ஏற்படுகிறது. இது தொடர்பான செய்திகள் கூட வலம் வருகிறது. அந்த வகையில் தற்போது வந்தே பாரத் ரயிலில் ஊழியர் ஒருவர் ஒரு பயணிக்கு சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவை தவறுதலாக கொடுத்துவிட்டார். அதாவது கடந்த 26 ஆம் தேதி ஹவுராவிலிருந்து ராஞ்சிக்கு வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கேட்டரிங் ஊழியர் பயணிகளுக்கு உணவினை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது தவறுதலாக சைவ உணவுக்கு பதில் ஒருவருக்கு அசைவ உணவை கொடுத்துவிட்டார். அதனை அந்த முதியவர் சாப்பிட்ட நிலையில் அசைவம் என தெரிந்தது. இதனால் கோபமடைந்த அந்த முதியவர் ஊழியரிடம் கேட்டார். அதற்கு அவர் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். இருப்பினும் முதியவர் கோபத்தில் அந்த ஊழியரை கன்னத்தில் இரண்டு முறை அறைந்துவிட்டார். இதை பார்த்து மற்ற பயணிகள் ஆத்திரம் அடைந்த நிலையில் ஊழியருக்கு ஆதரவு கொடுத்து அவர்களும் முதியவருடன் தகராறு செய்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அங்கு வந்து பார்சலை பிரித்து பார்க்காமல் சாப்பிட்டது தவறு என்று கூறியதோடு ஊழியரை அடித்தது தவறும் என்றும் அந்த பயணியிம் கூறினர்.