
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு அதிர்ச்சி வீடியோவில், ஒரு பாதுகாப்பு காவலர் காணப்படும் ஒருவர் சைக்கிளை ஓட்டிச் செல்லும் போது, அவரது சைக்கிளின் பின் கேரியரில் ஒரு பெரிய பாம்பு சிக்கிக்கொண்டுள்ளது. அந்த நபருக்கு இது தெரியாமல் இருந்த நிலையில், பாம்பு மெதுவாக சைக்கிளின் இருக்கையின் மேல் ஏறுகிறது. பின்னர், மற்றோரு சைக்கிளில் அமர்ந்திருந்த மற்றொரு நபரின் அருகே சென்ற பாம்பு, அவரை கடிக்க முயற்சிக்கிறது. இதனால் பயந்த அந்த நபர் உடனே சைக்கிளை விட்டு கீழே இறங்கி ஓடுகிறார்.
இந்த வீடியோவில் பாம்பு ஆக்ரோஷமாக கடிக்க முயற்சி செய்வது தெளிவாகக் காணப்படுகிறது. அதன்பின்னர் அந்த பாம்பு சைக்கிளில் இருந்து கீழே இறங்கி சாலையின் ஓரமாக ஊர்ந்து செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ “பாம்பு சைக்கிளில் சவாரி செய்தது போல” உள்ள அபூர்வ சம்பவமாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வீடியோ இதுவரை 4.8 கோடியுக்கும் அதிகமான பார்வைகளையும், 1.1 லட்சத்திற்கும் மேல் லைக்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பல பயனர்கள், பாம்பு ‘தோடியா’ வகையைச் சேர்ந்ததாகவும், அது விஷமற்றது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் பாம்புகள் விஷம் உள்ளது என்பதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியம் எனவும் பலரும் கூறி வருகின்றனர். மேலும் சைக்கிளின் பின் கேரியரில் நீண்ட நேரமாக பாம்பு அமர்ந்திருந்த நிலையிலும் ஓட்டியவரை எதுவும் செய்யவில்லை என்பதுதான் இதில் அதிர்ஷ்டவசமான சம்பவம்.