பதினெட்டாவது ஐபிஎல் சீசன் திருவிழாவானது நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியதில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஐந்து முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியானது 19.1 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்த பிறகு இரண்டு அணி வீரர்களும் பரஸ்பரமாக கைகுலுக்கி மரியாதை செய்து கொள்வது வழக்கம். அப்படி மும்பை அணி வீரர்கள் தோனியிடம் வரிசையாக கைகொடுத்து சென்ற போது அதில் ஒருவரை தோனி விளையாட்டாக பேட்டால் அடித்த விடியோ வைரலாகி வருகிறது. அவர் சிஎஸ்கேவில் இருந்தபோது தோனி எப்பொழுதுமே அவரை விளையாட்டாக அடிப்பது வழக்கம். அதேபோல அவர் அடித்ததும் தீபக் சகார் சிரித்துக் கொண்டே நழுவி  ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.