நார்வே நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன். இவர் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டுக்கான ரேபிட் மற்றும் பிளிட்ஸ் உலக செஸ் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதாவது இவர் ஜீன்ஸ் அணிந்து கொண்டு போட்டிக்கு வந்ததால் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இவருக்கு 200 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் போட்டியின் 9-வது சுற்றில் உடையை மாற்றுமாறு கூறிய போதிலும் அதனை ஏற்க மறுத்ததால் தகுதி நீக்கம் செய்துள்ளனர். மேலும் இதனால் அவர் கோபத்தில் இந்த போட்டியில் இனி பங்கேற்க போவதில்லை என்று கூறிவிட்டு போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.