இங்கிலாந்தைச் சேர்ந்த 52 வயதான மஞ்சித் சங்கா என்ற பெண், கடந்த 2025 ஜூலை மாதம் தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த நாய் அவரது கையில் இருந்த ஒரு சிறு காயத்தை நக்கியுள்ளது. அதன் பிறகு அடுத்த சில நாட்களிலேயே அவரது உடல்நிலை மோசமடைந்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார். அவருக்கு ‘செப்சிஸ்’ (Sepsis) எனப்படும் ரத்த நச்சு பாதிப்பு ஏற்பட்டு, இதயம் ஆறு முறை நின்று துடித்தது. 32 வார போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தாலும், அவரது இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் மருத்துவர்கள் அகற்ற வேண்டியதாயிற்று.
செல்லப் பிராணிகளின் எச்சிலில் இருக்கும் ஒரு வகை பாக்டீரியா, மனிதர்களின் காயங்களில் படும்போது அது உயிருக்கே ஆபத்தான செப்சிஸ் நோயை உண்டாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். “இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மஞ்சித் கண்ணீருடன் எச்சரித்துள்ளார்.
