சென்னை மாவட்டம் ஓட்டேரி பேரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(48). இவரது மனைவி தேவிகா(37). இவர் புரசைவாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு தக்சன்யா(19), தர்ஷிகா(12) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில நாட்களாகவே சரியாக பேசிக் கொள்ளாமல் இருந்தனர்.

நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டபோது தினேஷ் கோபத்தில் வெளியே சென்று விட்டார். அதன் பிறகு தேவிகா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இனி நான் உங்களுடன் வாழ விரும்பவில்லை தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ் மனைவியை மீண்டும் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் தினேஷ் வீட்டிற்கு ஓடி வந்தார். இதற்கிடையே அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடிக்கு சென்று தேவிகா கீழே குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தேவிகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது