சேலம் மாவட்டம் தீராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி இளவரசி. இதில் சிவகுமார் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்களை அழைப்பதற்காக சிவக்குமார் வெளியே சென்றார்.

அப்போது சிவகுமாரின் தாய் விஜயகுமாரி சகோதரர்களான சரவணகுமார், மோகன் குமார், மகேந்திர குமார் மற்றும் நிர்மலா, புவனேஸ்வரி ஆகியோர் இளவரசியின் வீட்டிற்கு வந்து மின்விளக்குகளை அடித்து நொறுக்கி இளவரசியின் முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றனர்.

அதன் பிறகு மட்டை, துடைப்பம், செருப்பு, அரிவாள் உள்ளிட்டவற்றால் இளவரசியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை செல்போனில் பதிவு செய்த மகள் ஸ்ரீராம் சரத், மகள் ஆகியோரையும் தாக்கி செல்போனை பிடுங்கி சேதப்படுத்தியுள்ளனர்.

அவர்களது சத்தம் கட்டி அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் விஜயகுமாரி தனது மகன்களுடன் அங்கிருந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. காயமடைந்த இளவரசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.