தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த 8 மாதங்களாக தவெக-வுடன் இணைந்து பயணித்து வந்த நிலையில், அக்கட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், ஒருங்கிணைப்பு சரியில்லாத காரணத்தாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் M.F. தமீம் தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணத்தில் இது ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

​தவெக-விற்கு அளித்து வந்த ஆதரவை முழுமையாக வாபஸ் பெற்ற கையோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்கப் போவதாக தமீம் அறிவித்துள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கப் போவதாகவும், தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தலைமைக்குக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திடீர் கட்சித் தாவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.