
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்தனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்தார். இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்த நிலையில் அவர் ஒப்புதல் வழங்கினார். மேலும் இதைத் தொடர்ந்து அண்ணாமலையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அதற்கான நகல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.