
கடலூர் மாவட்டத்தில் கல்குணம் என்ற கிராமம் இருக்கிறது. அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே மர்ம முறையில் குடிசை வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களும் தீப்பிடித்து எரிகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த பயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் நேற்று மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கல்குணம் கிராமத்தின் பக்கத்து ஊரான மீனாட்சிபேட்டையில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல்(48) என்ற மகன் இருக்கிறார். அவர் அப்பகுதியில் தள்ளு வண்டியில் பெட்டிக்கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் தள்ளு வண்டி கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதன் பின் 11 மணி அளவில் திடீரென அந்த தள்ளு வண்டி கடை தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதனை அந்த வழியாக சென்ற சூப்பிரண்டு ராஜாராம் பார்த்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவுத்தார்.
அதன்படி விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் அந்த வண்டி முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் இச்சம்பவம் பகுதியில் பெரும் பயத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.