
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் பவ்தன் இன்று மலை பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதியில் மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக இன்று கீழே விழுந்து பயங்கர விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதில் 2 விமானிகள் மற்றும் ஒரு இன்ஜினியர் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் தீப்பிடித்து எறிந்ததால் அதிலிருந்த 3 பேரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது விபத்து நடந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Breaking News 🚨: Two people feared dead in a helicopter crash near Bavdhan in Pune district. More detail awaited: Pimpri Chinchwad Police official#Pune #PimpriChinchwad #Helicoptor #Helicoptorcrash #police #Bavdhan pic.twitter.com/Jk8F87tbGh
— Shino SJ (@Lonewolf8ier) October 2, 2024