பிரபல நடிகை பூஜா ஹெக்டேவுடன் நடிகர் விஜய் இணைந்து புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் விஜய் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார்.  இந்நிலையில், விஜய்க்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் லியோ படத்தின் நா ரெடி பாடலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, மற்றும் விஜய் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் ‘புட்ட பொம்மா… புட்ட பொம்மா ‘ பாடலுக்கு கியூட்டாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.