தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மின் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஈர நேரங்களில் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் கையாள வேண்டும் என்று மின்துறை எச்சரித்துள்ள நிலையில் மின்தடை தொடர்பாக 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கும் விதமாக போன் நம்பர் போன்றவைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மின்துறை அதிகாரிகள் அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது எந்த காரணத்தைக் கொண்டும் மின்வாரிய ஊழியர்கள் தங்களுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்யக்கூடாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதை மீறும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை மற்றும் மின் சேவை துண்டிப்பு தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் 94987 94987 என்ற செல்போனுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.