
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் அதிமுகவினர் ஓட்டுகள் திமுகவுக்கு தான் விழுந்துள்ளதாக தற்போது அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். அதோடு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் இது தொடர்பாகவும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு 11 முறை தோல்வியை சந்தித்துள்ளனர்.
இதன் காரணமாக அதிமுக தலைவர்கள் அவர் மீது வெறுப்பில் இருக்கிறார்கள். இப்போது அதிமுக தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய பயம். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் ஓட்டுகள் உதயசூரியனுக்கு கிடைத்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்து செல்வதற்கான தகுதி என்பது இல்லை என்று கூறினார்.