சென்னை மெரினாவில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணா சாலை மற்றும் நேம்பியர் பாலத்தில் இருந்து மெரினாவுக்கு வரும் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அதாவது காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்பட மாட்டாது. கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் திருப்பி விடப்படும். அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நேம்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலது புறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.