அரசு மற்றும் அரசு துறை சார்ந்த நிகழ்ச்சிகள் திட்டமிடும்போது பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி பல விஷயங்களை கருத்தில் கொண்டு அவை குறித்து செயல்பாடுகளை அரசுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துக் கொள்கின்றனர். அவ்வகையில் தற்போது சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற பகுதிகளில் இனி ட்ரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.