சென்னையில் மாநகர பேருந்துகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.. வேலைக்கு செல்பவர்கள், மக்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில்  இந்த பேருந்து சேவை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நினையில் பெரும்பாலான பஸ்களின் நேரத்தை துல்லியமாக நாம் கூற முடியாது. இதற்காக பேருந்து நிலையத்திற்கு வந்து பக்கத்தில் இருப்பவர்களிடம் இந்த பஸ் எப்பொழுது வரும் என்றும் கேட்க வேண்டும்.

அவர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் அது தெரியாது என்று தான் கூறுவார்கள் . இதனை போக்கும் விதமாக  பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை அடுத்து பேருந்து எப்பொழுது வரும் என்று மக்கள் அறியும் விதமாக டிஜிட்டல் தகவல் பலகை பொருத்த முடிவு செய்துள்ளது . முதற்கட்டமாக 50 பேருந்துகளில் இதற்கான கருவிகளை பொருத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த புதிய முன்னெடுப்புக்கு பொதுமக்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.