
தமிழகத்தில் நடைபாண்டில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23 ஆம் நிதியாண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களை மீதம் உள்ளதால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்த வேண்டும்.
இந்த சொத்து வரியை நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். சென்னை மாநகராட்சி இணையதளம், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம், NEFT/RTGS, இ – சேவை மையங்கள் மூலமாக நீங்கள் எளிதாக சொத்து வரியை செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.