சென்னை பெரம்பூர் ஐ சி எப் ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதனைத் தவிர அம்ரித் வந்தே பாரத் மற்றும் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகளும் நடைபெறுகிறது. முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை மற்றும் காட்பாடி இடையே நாளை நடைபெற உள்ளது.

குறுகிய தொலைவில் அமைந்திருக்கும் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் முதல் வந்தே மெட்ரோ ரயில் சென்னை மற்றும் காட்பாடி இடையே விரைவில் இயங்க உள்ளது. ஏசி வசதியுடன் ஆன இந்த ரயில்களில் சுமார் 100 நிமிடங்களில் காட்பாடி சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது