
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் ஒன்றுள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் அந்த கோவிலின் கனகசபைக்குள் பக்தர்களை அனுமதிக்க தடை செய்யப்பட்டிருந்து. இதுதொடர்பாக சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை ஐகோர்ட், கனகசபைக்குள் பக்தர்கள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.
அதன்படி அறநிலையத்துறை, கனக சபைக்குள் பக்தர்களை அனுமதித்தனர். இதனை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நடராஜர் கோயிலின் கனகசபைக்குள் நின்று முதல் பக்தர்கள் சென்று, சாமி தரிசனம் செய்து வந்தனர். மேலும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.