
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கருணாஸ். இவர் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவருடைய உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் விசாரணை நடத்திய போது தன்னிடம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான லைசன்ஸ் இருப்பதாகவும் அதற்கான குண்டுகளை அவசரமாக கிளம்பிய போது மறந்து எடுத்து விட்டு வந்ததாகவும் கூறினார். இருப்பினும் நடிகர் கருணாஸ் விமானத்தில் பயணிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. மேலும் இந்த சம்பவம் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.