
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கூறிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்யா வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருக்கிறது.