புயல் காரணமாக சென்னையில் அதிக மழை பொழிந்து வருகிறது. கனமழையால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக சென்னையில் மின்தடை ஏற்பட்டுள்ளது எனவே துண்டிக்கப்பட்ட மின்விநியோகமானது எப்பொழுது மீண்டும் கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சாலை முழுக்க வெள்ள நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மழை நீரால் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தாலங்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனைகளுக்கு தடை இன்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எந்த வித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதால் எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மழை குறைந்த பிறகு கண்டிப்பாக. எந்த தடையும் என்று மின்சாரம் வழங்கப்படும். அதுவரை பொதுமக்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் பல ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.