சென்னை அரும்பாக்கத்தில் சிறுமி ஒருவர் தனது தாயுடன் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பும்போது தெருவில் நடந்து  சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாடு திடீரென அந்த சிறுமியை கொம்பால் முட்டித் தூக்கியது. இதனையடுத்து சிறுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து மாட்டின் உரிமையாளர் மீது 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன், “அரும்பாக்கம் சம்பவத்திற்கு வருந்துகிறேன். சென்னையில் பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் அதன் உரிமையாளருக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்..