தலைநகர் சென்னை காலை முதல் இரவு வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த வகையில் ராமாபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுதி. இந்த பரபரப்பான சாலையில ஏகே 47 துப்பாக்கி கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மியாட் மருத்துவமனையின் அருகே இந்த துப்பாக்கி கண்டறியப்பட்டுள்ளது. இதில் 30 தோட்டாக்களும் இருந்துள்ளது. இதனை சிவராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லும் ஆவடியைச் சேர்ந்த CRPF காவலர் ஒருவர் துப்பாக்கியை தவறுதலாக கீழே போட்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய விசாரணை முடிந்த பிறகு உரியவரிடம் துப்பாக்கி ஒப்படைக்கப்படும் என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.