
சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கிளாம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள.