
கூட்ட நெரிசரை தவிர்க்க தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் கொச்சி வேலிக்கு 14 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் மே 16, 18, 23, 25, 30 , ஜூன் 1, 6, 8, 13, 15,20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் இரவு 9.40 மணிக்கு ரயில் புறப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, கடையநல்லூர் மற்றும் தென்காசி வழியே கொச்சுவேலிக்கு மறுநாள் செல்லும். அதே மார்க்கத்தில் திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.