
பெங்களூரில் மிக பிரபலமான மருத்துவமனை நாராயன ஹெல்த். இந்த மருத்துவமனையினை மருத்துவர் தேவி செட்டி என்பவர் நடத்தி வருகிறா.ர் மேலும் இவர் அதிதி என்ற பெயரில் ஒரு காப்பீட்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் .குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற நினைப்பவர்களுக்கு அருமையான மருத்துவ திட்டத்தை அறிவித்துள்ளார் இந்த மருத்துவர்.
இந்த திட்டத்தின் படி ஒருவர் பத்தாயிரம் ரூபாயை முதலில் கட்டணமாக செலுத்தி உறுப்பினராகலாம். அப்படி உறுப்பினர் ஆகும் பட்சத்தில் அவருக்கு ஒரு கோடி வரை அறுவை சிகிச்சைகளும், ஐந்து லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம். இதில் பிரிமியம் தொகையை வருடம் தோறும் பத்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். குடும்பத்தில் மூத்தவர்கள் 45 வயதை தாண்டியிருந்தால் பிரீமியம் தொகையானது வேறுபடும்.