
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்தநாள் வர இருக்கிறது. ஆனால் ஏற்கனவே தொண்டர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய இணை மந்திரி எல் முருகன் மற்றும் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரில் சென்று திடீரென அவரை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது தேர்தல் மற்றும் களப்பணிகள் குறித்து ஆலோசனை செய்ததாகவும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது தொடர்பாக இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பாஜக துணை தலைவர் கரு. நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் நெல்லையில் பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில் நெல்லை மற்றும் பாளை தொகுதியை அதிமுகவுக்கு இந்த முறை ஒதுக்க வேண்டும் எனவும் இல்லை எனில் அதிமுக திருநெல்வேலியில் இல்லை என்ற நிலை உருவாகி விடும் என்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னதாக கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.