தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டினை பிரமாண்டமாக நடத்தி முடித்த நிலையில் அதன் பிறகு கட்சியில் உறுப்பினர் சேர்க்கை என்பது தீவிர படுத்தப்பட்டது.

மாற்று கட்சியில் இருப்பவர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை நினைக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர்கள் பயணித்த நிலையில் தற்போது ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களில் 70% பேர் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் என கூறப்படுகிறது. புதிய உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு கட்சியின் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவது மற்றும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி பயிற்சி பட்டறை வழங்குவது உள்ளிட்டவை செய்ய இருக்கின்றனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என நடிகர் விஜய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.