
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக களம் இறங்கியுள்ளது. அதிமுக குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. வன்முறை வெறியாட்டம், வடக்கே இருந்து ஏவும் விஷ அம்புகள் அனைத்தும் ஆளும் கட்சியின் அதிகார மமதை.
இது போன்ற கோழைத்தனங்களை தாண்டி தானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகின்றோம். சில திடீர் தலைவர்கள் மூலமாக நம்மை சீண்டுகிறது. அதிமுக ஆற்றல் மற்றும் தொண்டர் பலம் பற்றி பாஜகவுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.