இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பெத் மார்ட்டின் (28). இவருக்கு திருமணம் ஆகி லுக் மார்ட்டின் என்ற கணவர் இருக்கும் நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி குடும்பத்தோடு துருக்கி சென்று இருந்தனர். இவர்கள் அங்கு தரையிறங்கிய சில மணி நேரத்திலேயே பெத் மார்ட்டினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு முதலில் அந்த நாட்டின் உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்று நினைத்த நிலையில் பின்னர் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது மரணத்திற்கு உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே அந்த பெண் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அவரது உடலை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்த போது இங்கிலாந்து மருத்துவர்கள் அதற்கு முன்பு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் உடலில் இதயம் இல்லாதது தெரியவந்த நிலையில் அதனை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து டாக்டர் உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் பெத் மார்ட்டின் மரணத்தில் துருக்கி  மருத்துவர்கள் உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதனை அதிகாரிகள் மறுத்த நிலையில் அவருக்கு எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.