இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன.

அதன்படி சுயதொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் PMRY திட்டத்தின் மூலமாக 12 சதவீதம் முதல் 15.5 சதவீதம் வரை வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று பயனடையலாம். 18 முதல் 35 வயதுடன் (எஸ்சி எஸ்டி பெண்களுக்கு 45 வயது வரை) 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும். ஆதார் அட்டை மற்றும் தொழிற்பயிற்சி சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் வங்கிகளில் விண்ணப்பித்தால் 10% முதல் 20 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.