மத்திய பிரதேச மாநிலத்தில் குள்ளநரி (ஓநாய்) தாக்குதல் சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.  இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள். இந்த குள்ளநரி தாக்குதலால் பலர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது செஹோர் என்ற மாவட்டத்தில் 2 பேர் அமர்ந்திருந்தனர். அவர்கள் சாலையோரத்தில் அமர்ந்திருந்த நிலையில் திடீரென அங்கு குள்ளநரி ஒன்று வந்தது. அந்த நரி திடீரென அவர்கள் மீது பாய்ந்தது.

அவர்கள் கற்களால் அடித்து அதனை விரட்ட முயற்சிக்கிறார்கள். அதோடு ஒருவர் நரியை பிடித்து தூக்கி வீசினார். இதில் சுமார் 15 அடி தூரம் தள்ளி போய் நரி கீழே விழுந்தது. இருப்பினும் நரி தாக்கியதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் சியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கிராம மக்கள் யாரும் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.