விண்வெளி விஞ்ஞானியும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவரான ராம் நரேன் அகர்வால் காலமானார். அக்னி வரிசை ஏவுகணை வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை இவர் ஆற்றியுள்ளார். கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்னி திட்டத்தை வழிநடத்தியதில் இருந்து இவரை அக்னி மேன் என்று பலரும் அழைத்தனர். சுதந்திர தினமான நேற்று இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அவரது மறைவு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் .