பூமத்திய ரேகையில் ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேல் நிலவும் வெப்பம் காரணமாகவும், காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கடும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 28-ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி இன்று 18 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். மேலும் அதன்படி பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.