இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை சேர்ந்த சுங்க கட்டணமானது  நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி டூ மீரட்   விரைவு சாலையில் ஏப்ரல் 1 முதல் சுங்கு வரியை உயர்த்த இருப்பதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 14 ஆம் ஆண்டு முதல் கட்டணம் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலகுரக வாகனங்களுக்கான கட்டணத்தை 5% உயர்த்தியும் பெரிய வாகனங்கள் டோலில்  10 சதவீதம் உயர்த்தவும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது 135 கிலோமீட்டர் நீளமுள்ள டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் வேயில் ஒரு கிலோமீட்டர் 2.19 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இனி உயர்வுக்குப் பிறகு காருக்கு 160 வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 168 ஆக வசூல் செய்யப்படும்.