நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை மற்றும் குறிப்பிட்ட பண்டிகைகளுக்கான விடுமுறை குறித்த அனைத்து அட்டவணையையும் ஆண்டின் தொடக்கத்திலேயே ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தற்போது மாத கடைசியாய் நெருங்கிய நிலையில் மார்ச் 29ஆம் தேதி அன்று நாளை புனித வெள்ளி வர உள்ளது. இதனால் நாளை வங்கிகள் செயல்படுமா என்று மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி நாளை புனித வெள்ளி அன்று திரிபுரா, அசாம்,  ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் , ஜம்மு மற்றும் ஸ்ரீ நகர தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வணிக காரணங்களுக்காக அரசு கணக்குகளைக் கொண்டுள்ள இந்திய வங்கிகள் செயல்படுமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.