
லப்பர் பந்து திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மவுனிகா. இந்த படத்தின் மூலமாக அதிக புகழை பெற்ற இவர் சின்னத்திரை நடிகர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சந்தோஷ். இவரும் மவுனிகாவும் காதலித்து வந்த நிலையில் இருவரின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது குருவாயூர் கோவிலில் வைத்து எளிமையாக இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.