நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 7 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால் சீமான் குடும்பத்தினரும், நாதக தொண்டர்களும் பெரும் மகிழ்ச்சியில் மிதந்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் சீமானுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் வேளையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாபெரும் அரசியல் ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.
தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன், சீமானின் பெண் குழந்தைக்கு பாரம்பரிய முறைப்படி பிரம்மாண்டமாக சீர் கொண்டு வந்து ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தனது உறவினர்களுடன் வந்து, பல தாம்பூல தட்டுகளில் பழங்கள், மங்களப் பொருட்கள் மற்றும் மேளதாள வாத்தியங்கள் முழங்க வந்த அனிதா ராதாகிருஷ்ணனை, சீமான் நேரில் வாசலுக்கு வந்து நெகிழ்ச்சியோடு வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
அங்கு சீமானின் மகளுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்தக் கையால் தங்க செயின் அணிவித்து வாழ்த்திய இந்த புகைப்படம், சோசியல் மீடியாவில் தீயாய் பரவி அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
