நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக சீமான் பற்றி சர்ச்சைக்குரிய விதமாக பேசிவரும் நிலையில் இதற்கு தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, மதசார்பின்மை தொடர்பாக விசிக சார்பில் பேரணி அவசியமாகியுள்ள நிலையில் இதில் மத சார்பின்மையை வலியுறுத்தும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். சீமான் பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமான முறையில் பேசி வருகிறார்.

இது தேவையில்லாத சர்ச்சை. தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார். இதுதமிழ்நாட்டிற்கு நல்லது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் கூட்டணி உடைய வேண்டும் என்பதற்காக அல்ல அவர்கள் இன்னும் ஒட்டாமல் இருப்பதற்காக தான் என்று கூறினார். மேலும்  ரிசர்வ் வங்கியின் புதிய நகை கடன் விதிமுறைகள் ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் அதனை எதிர்த்து வருவதால் கண்டிப்பாக அதனை திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.