
புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாள் சன்னதி தனி தனியாக அமைந்துள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் ரிலீஸ் வீடியோ என்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலில் ராஜகோபுரத்தில் இருந்து உள்ளே வரும் பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் சினிமா பாடலுக்கு கட்டிப்பிடித்து ரிலீஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பது உறுதியானது.
பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருவரும் நடந்து கொண்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவில் செயல் அலுவலர் சிவமணி நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.