
தாய்லாந்தில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரமான பட்டாயாவில் சுற்றுலா பயணி ஒருவர் சட்டை போடாமல் பெண்கள் முன்பு பாலியல் ரீதியான அசிங்கமாக நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர், ஒரு ஊழியரின் மீது பியர் ஊற்றியதையும் காணொளியில் பார்க்க முடிகிறது.
சம்பவத்தின் போது அந்த பயணியை பாரிலிருந்து வெளியே அனுப்பியிருந்தார்கள், ஆனால் அதற்குப் பிறகும் அவர் தெருவில் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டதை பாரில் உள்ள பாதுகாப்பு பணியாளர்கள் கவனித்தனர்.
Pattaya bar temporarily closed after tourists assault staff, spark brawl
.
A bar in Pattaya has shut down temporarily following a widely shared video showing a violent altercation between foreign tourists and Thai nationals.
.
The incident, which took place on Tuesday, sparked… pic.twitter.com/maNPWQu4nT— Thenationthailand (@Thenationth) April 16, 2025
பாதுகாப்பு பணியாளர்கள் குத்துச்சண்டையில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், அந்த பயணியின் அட்டகாசத்தை ஒரே ஒரு துல்லியமான பஞ்ச் மூலம் முடித்தனர்.
பாதிக்கப்பட்ட பயணியின் நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றாலும், அவர் ஒரே அடியில் தரையில் வீழ்ந்த நிலையில் மீண்டும் எழ முடியாமல் போனது.
சம்பவத்தை நேரில் பார்த்த பார்வையாளர் நிக் ரிஸால், “அந்த பயணி ஒரு பெண் ஊழியருக்கு தொந்தரவு கொடுத்து, தற்பெருமையுடன் சண்டையைத் தொடங்கினார். ஆனால் அவருக்கு அதற்கு உரிய தண்டனைதான் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.
துஷ்பிரிவினையும் மரியாதையற்ற நடத்தையும் வெளிநாடுகளில் காட்டும் பயணிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இறுதியில், அவமானத்துடன் அந்த பயணி தங்கி இருந்த விடுதியை நோக்கி நடந்துச் சென்றதை வீடியோவில் காணலாம்.