
தேர்தல் வருகிறது என்பதற்கான அறிகுறி தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் இன்று முதல் 200 ரூபாய் குறைந்து 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இது தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி? சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்திருப்பதே அதற்கான அறிகுறி. மக்களை கசக்கிப் பிழிந்து அரசே திடீரென்று விழித்துக் கொள்கிறது என்று விமர்சித்துள்ளார்.