அமெரிக்க நாட்டில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது சிறையில் உள்ள கைதிகள் ஒருவருக்கொருவர் தொடாமல் சந்திக்காமல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அதாவது அமெரிக்க நாட்டில் உள்ள மியாமியில் டர்னர் கில்ஃபோர்ட் சிறை உள்ளது.‌ இந்த ஜெயிலில் டெய்சி லிங்க் எனும் 29 வயது பெண் கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இதேபோன்று மற்றொரு சிறையில் ஜோன் டெபாஸ் என்ற 24 வயது நபர் மற்றொரு வழக்கில் சிக்கி அடைக்கப்பட்டிருந்தார்.

இவர்கள் இருவரும் இதுவரை ஒருவருக்கொருவர் சந்தித்தது கூட கிடையாது. அப்படி இருக்கும்போது திடீரென இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதில் டெய்சிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது. அப்போது டெபாஸ் குழந்தைக்கு தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்த போது தான் உண்மை தெரிய வந்தது.

அதாவது இவர்கள் இருவருடைய சிறையையும் ஒரு ஏசி வெண்ட் இணைத்தது. இதன் மூலம் இருவரும் பேசி பழகிய நிலையில் ஒரு கட்டத்தில் டெபாஸ் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முதலில் டெய்சி மறுத்தார். பின்னர் இருவரும் ஒரு திட்டம் தீட்டியுள்ளனர். அதாவது அந்த ஏசி வெண்ட் வழியாக ஒரு போர்வையை டெய்சி அனுப்பிய நிலையில் அது நேராக அவருடைய அறைக்கு சென்றது.

இதில் தன்னுடைய ஒரு விந்துவை ஒரு பிளாஸ்டிக் கவரில் கட்டி இந்த போர்வை வழியாக டெய்சி அறைக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த விந்துவை தன்னுடைய பிறப்புறுப்பு வழியாக தன்னுடைய உடம்பில் டெய்சி செலுத்தியுள்ளார். அவர்கள் ஒரு நாளைக்கு இப்படி ஐந்து முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்தனர். இதில் தான் டெய்சி கர்ப்பமானார். மேலும் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடாமல் சந்திக்காமல் குழந்தையை பெற்று எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.