
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் புதைத்த சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் இறப்பு இயற்கையானது அல்ல எனவும், சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் எனவும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் தாத்தா தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வந்தார் என்பது தெரிய வந்தது. இதனால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சிறுமியின் தாத்தாவை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சிறுமியின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.